தொடர் விடுமுறை: சுற்றுலா தலங்களில் திரண்ட பொதுமக்கள் உற்சாகம்
தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமானோர் குவிந்தனர். 9 மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது போன்ற கூட்டத்தை அங்கு காணமுடிந்தது.
கன்னியாகுமரி,
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவித்ததையடுத்து தற்போது பொதுமக்கள் கொஞ்சம் ெகாஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வந்ததையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் தங்களது உறவினர்கள், நண்பர்களுடன் சுற்றுலா தலங்களுக்கு சென்று குதூகலத்துடன் பொழுதை கழித்தனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. காலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காணவும் மாலையில் சூரியன் மறையும் காட்சியை காணவும் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. இதனால் கடற்கரை களை கட்டியது.
விவேகானந்தர் மண்டபம்
இதுதவிர கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். நேற்று முன்தினமும், நேற்றும் 11,203 பேர் படகில் பயணம் செய்துள்ளனர். இதுபோல், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு பூங்கா, பேரூராட்சிக்கு சொந்தமான கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா, வட்டக்கோட்டை போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
திற்பரப்பு
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெறுகிறது. இங்கு ஆண்டுமுழுவதும் தண்ணீர் பாய்வதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விடுமுறை தினமான நேற்று குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் குடும்பம், குடும்பமாக ஏராளமானோர் குவிந்தனர்.
அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து, பூங்காவில் விளையாடி, அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மாத்தூர் தொட்டிப்பாலம்
ஆசியாவிலேயே மிகவும் உயரமான தொட்டிப்பாலம் என போற்றப்படும் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் நேற்று ஏராளமானோர் திரண்டனர். அவர்கள் பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை நடந்து சென்றும், காட்சி கோபுரத்தில் ஏறியும் இயற்கை அழகை ரசித்தனர். தொடர்ந்து பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடி, ஆற்றில் குளித்து குதூகலமடைந்தனர்.
பத்மநாபபுரம் அரண்மனை
பத்மநாபபுரம் அரண்மனையில் நேற்று குமரி மற்றும் கேரளாவை ேசர்ந்த ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக திரண்டனர். அவர்கள் அரண்மனையின் ஒவ்வொரு பகுதிகளையும் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். அரண்மனையில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள வாள் உள்ளிட்ட போர் ஆயுதங்கள், நாணயம் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களை கண்டுகளித்தனர். இதுபோல், குளச்சல் கடற்கரை, சொத்தவிளை கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.