தமிழகத்தில் 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் ரவீந்திரநாத் எம்.பி. பேட்டி

தமிழகத்தில் 3-வது முறையாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று ரவீந்திரநாத் எம்.பி. கூறினார்.

Update: 2020-12-27 04:31 GMT
கபிஸ்தலம்,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் மகனும், தேனி தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் நேற்று சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். பின்னர் அவர் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா மறைவிற்கு பின்பு ஒரு சாமானிய தொண்டர்கள் ஆட்சியும், கட்சியும், காப்பாற்றி வருவது என்பது இந்த இயக்கத்தில் மட்டும் தான் சாத்தியப்படும். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். திடீர் தரிசனத்திற்கு என்ன காரணம் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கடந்த ஓராண்டு காலமாக கொரோனா வைரஸ் பிடியில் உள்ள தமிழக மக்கள் மீண்டும் புத்துணர்வு பெற்று எழுச்சி அடைய வேண்டும் என்பதற்காக தரிசனம் செய்ய சுவாமிமலை சுவாமிநாத கோவிலுக்கு வந்ததாக கூறினார்.

முதல்-அமைச்சரின் கவனத்திற்கு

ரேஷன் கடைகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்குவது மிகுந்த தாமதம் ஏற்படுவதை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். முதல்வர் வேட்பாளர் குறித்து கூட்டணி கட்சியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி முடிவெடுக்கும் என அதன் மாநில தலைவர் முருகன் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கையில் அது அவரின் நிலைப்பாடு. எங்களது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று நாங்கள் ஒருமனதாக முடிவு எடுத்துள்ளதாக கூறினார்.

அப்போது அவருடன் கும்பகோணம் ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், என்.ஆர்.வி.எஸ்.செந்தில், திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், சுவாமிமலை பேரூர் செயலாளர் ரங்கராஜன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்