டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மயிலாடுதுறையில், காங்கிரஸ் கட்சியினர் ஏர் கலப்பை பேரணி நடத்த முயற்சி

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் ஏர் கலப்பை பேரணி நடத்த முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Update: 2020-12-27 03:49 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர்கலப்பை பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக விஜயா தியேட்டர் சாலையில் காங்கிரஸ் பேரணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சரத்சந்திரன், ஏ.பி.எஸ்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர தலைவர் ராமானுஜம் வரவேற்று பேசினார்.

இதில் வட்டார தலைவர்கள் அன்பழகன், ராஜா, உத்தமன், மாநில மகளிர் காங்கிரஸ் செயலாளர் கிரிஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் மூங்கில் ராமலிங்கம், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் நவாஜ்தீன், சீர்காழி முன்னாள் நகரசபை தலைவர் கனிவண்ணன், நகர செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

கோஷங்கள்

நிகழ்ச்சியின்போது டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து ஏர் கலப்பை பேரணி புறப்பட்டது.

அப்போது போலீசார் பேரணியை தடுத்து நிறுத்தினர். மாலை 6 மணி கடந்து விட்டதால் தடையை மீறி பேரணி செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்யாமல் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினர் களைந்து சென்றனர்

மேலும் செய்திகள்