வயல்வெளிகளில் பயிர்களை தாக்கும் அந்துப்பூச்சி, ஆனைக்கொம்பனை ஒழிப்பது எப்படி? கலெக்டர் எஸ்.சிவராசு அறிவுரை
வயல் வெளிகளில் பயிர்களை தாக்கும் அந்துபூச்சி, ஆனைக்கொம்பன் ஈக்களை ஒழிப்பது எப்படி என்பது குறித்து கலெக்டர் எஸ்.சிவராசு அறிவுரை அளித்துள்ளார்.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர் வடகிழக்கு பருவ மழையால் நெல், கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், சிறுதானிய பயிர்கள் மற்றும் பயறு வகைகள் அதிக அளவில் பூக்கும் மற்றும் பால் பிடிக்கும் தருணத்தில் உள்ளன.
இந்த காலகட்டத்தில் பனிப்பொழிவு மற்றும் காற்றினில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் வயல் வெளிகளில் தேங்கும் அதிகபடியான நீரினை வடியும் அளவுக்கு வாய்க்கால்கள் ஏற்படுத்தி வெளியேற்றி, வெள்ள நீரை வடிய செய்ய வேண்டும்.
அந்து பூச்சி, ஆனைக்கொம்பன்
மேலும் இக்காலகட்டத்தில் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த வேண்டும். அதற்காக முதல் கட்டமாக வயல் வெளிகளில் அதிக அளவில் விளக்கு பொறிகளை வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழித்திடலாம். இதனால் பூச்சிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்.
தற்போது திருவெறும்பூர் வட்டாரத்தில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள பத்தாளப்பேட்டை கிராமத்தில் பரவலாக ஆனைக்கொம்பன் தாக்குதல் தென்படுகிறது. இப்பூச்சியின் தாக்குதல் பெரும்பாலும் மழைக்காலங்களிலும், பனிக்காலங்களிலும் அதிகமாக இருக்கும். ஆனைக்கொம்பன் நெற்பயிரின் தூர்களின் அடிப்பாகத்தை துளைத்து உட்சென்று பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட தூர்கள் வளர்ச்சி குன்றி வெங்காய இலை போல காட்சியளிக்கும். அத்தகைய தூர்களிலிருந்து கதிர்கள் உருவாகாது. அதனால் மகசூல் இழப்பு ஏற்படும். ஆனைக்கொம்பன் ஈயானது, நீளமான, உருளை வடிவத்தில் பளபளப்பான வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற முட்டைகளை இலைகளின் அடிப்பகுதியில் இடும். புழுக்கள் வெளிவந்தவுடன் இலையுறையின் கீழே ஊர்ந்து சென்று நெற்பயிரின் தண்டின் அடிபாகத்தை தாக்கி வளர்ச்சியை பாதிக்கும்.
கொசுபோல காட்சி
இதன் முதிர் பூச்சிகள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் அல்லது சாம்பல் நிறத்தில் கொசு போல காட்சியளிக்கும். இவை இலையிலுள்ள பனித்துளிகளை உட்கொள்ளும்.
மேலும் தழைச்சத்து தரக்கூடிய யூரியா போன்ற உரங்களை குறைத்து இடுவதோடு பிரித்து இட வேண்டும். விளக்கு பொறி வைத்து இப்பூச்சியின் தாக்குதலை கண்காணிக்க வேண்டும். தாக்குதல் பொருளாதார சேத நிலையாக ஒரு தூருக்கு 3 முதல் 5 பூச்சிகள் தென்பட்டால் ஒரு ஏக்கருக்கு பிட்ரோனில்- 400 மில்லி அல்லது பென்தியான் 500 மில்லி அல்லது பெனிட்ரோதையான் 1,000 மில்லி ஆகியவற்றில் ஏதாவது ஒரு மருந்தை தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். எனவே, ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் தென்படும் வயல்களில் உடனடியாக பயிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டு மகசூல் இழப்பை தவிர்த்திடுமாறும், மேலும் வேறு வகையான பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் தென்பட்டால் விவசாயிகள் உடனடியாக அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு பூச்சி தாக்குதல் மற்றும் நோய்களை தடுத்திடும் வழிகளை கேட்டறிந்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.