வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி; அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

2020-21-ம் ஆண்டு ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ் ரூ46.02 லட்சம் செலவில் இனாம் மணியாச்சி பஞ்சாயத்து லட்சுமிபுரம், மேல காலனி, விநாயகர் நகர், ஆலம்பட்டி பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கிருஷ்ணா நகரில் ரூ.32 லட்சம் மதிப்பில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

Update: 2020-12-26 20:05 GMT
இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் திட்ட அதிகாரி தனபதி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாவட்ட கவுன்சிலர்கள் கே.சந்திரசேகர், டி.தங்கம்மாரியம்மாள் தமிழ்ச்செல்வன், கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், யூனியன் ஆணையாளர்கள் சசிகுமார், ஐகோர்ட் மகாராஜா, என்ஜினீயர்கள் தமிழ்ச்செல்வன், செல்வபாக்கியம், கோவில்பட்டி நகர செயலாளர் எஸ்.விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

மேலும் செய்திகள்