எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

எம்.ஜி.ஆர்.சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2020-12-26 15:31 GMT
கள்ளக்குறிச்சி, 

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் ஒன்றியத்திற்குட்பட்ட அத்தியூர்திருவாதி, பிடாகம், கண்டம்பாக்கம், கண்டியமடை, மரகதபுரம், வேட்டப்பூர் உள்ளிட்ட 62 கிளைகளிலும் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சுரே‌‌ஷ்பாபு தலைமை தாங்கினார். அ.தி.மு.க. நிர்வாகி சி.வி.ராதாகிரு‌‌ஷ்ணன் கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி- சேலையும் மற்றும் அன்னதானமும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் மனோகரன், மஞ்சுளா சசிக்குமார், ராஜ், அருணகிரி, நாராயணன், ஜெயக்குமார், ரவி, தனசேகர், அணி செயலாளர்கள் சிவா, ரமே‌‌ஷ், அழகேசன், பாக்யராஜ், சுந்தர்ராஜ், விஜயசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி பொற்படாக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் கண்ணன், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் மணி, ஒன்றிய பொருளாளர் ராஜமாணிக்கம், கூட்டுறவு சங்க தலைவர்கள் பச்சமுத்து, ராஜேந்திரன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் செல்ராஜ், வரதன் மற்றும் நிர்வாகிகள் கஜேந்திரமணி,வினோத், முத்துராமன், அண்ணாதுரை, லோகு, தனபாண்டி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராம ஞானவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யாக்கண்ணு, அமைப்பு சாரா ஓட்டுனர்அணி செயலாளர் செந்தில்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்