முப்பந்தல் அருகே விபத்து; பஸ்கள் மோதல்; பெண் உள்பட 4 பேர் படுகாயம்

முப்பந்தல் அருகே பஸ்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2020-12-26 00:46 GMT
முப்பந்தல் அருகே விபத்தில் சேதமடைந்த பஸ்களை படத்தில் காணலாம்.
ஆம்னி பஸ்-அரசு பஸ் மோதல்
நெல்லை மாவட்டம் ரோஸ்மியாபுரத்தில் இருந்து ஆசாரிபள்ளத்திற்கு நேற்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் முப்பந்தல் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி கொண்டு இருந்தது. அப்போது புதுச்சேரியில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த தனியார் ஆம்னி பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மீது வேகமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் பின்புற கண்ணாடி நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

ஆம்னி பஸ்சின் முன்பக்கமும் பலத்த சேதமடைந்தது. அதில் இருந்தவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

4 பேருக்கு காயம்
இதுபற்றி தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும், ஆரல்வாய்மொழி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 4 பேரையும் ஆம்புலன்சு மூலம் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த சாலையில் பஸ்களின் கண்ணாடியும், உதறி பாகங்களும் சிதறிக் கிடந்தது. பின்னர் விபத்துக்குள்ளான 2 பஸ்களையும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்