குண்டாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை: 12 புதிய கட்டிடங்களுக்கு பூமி பூஜை; அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.63 லட்சம் செலவில் 12 இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்ட நடைபெற்ற பூமி பூஜை மற்றும் குண்டாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட நடைபெற்ற பூமி பூஜையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார்.
பூமி பூஜை
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாரணாபுரம்புதூர், நாரணாபுரம் அருந்ததியர் காலனி, சிவன்காலனி, பர்மாகாலனி, போஸ்காலனி, விஸ்வநத்தம் முருகன்காலனி, பாரைப்பட்டி, நடுவூர், சித்துராஜபுரம் அய்யனார்காலனி, போடுரெட்டியபட்டி, விளாம்பட்டி, காமராஜர் காலனி ஆகிய 12 இடங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் மற்றும் 15-வது நிதிக்குழு மானியம் ஆகிய நிதி திட்டங்களின் கீழ் ரூ.63 லட்சம் செலவில் புதிதாக 12 சுகாதார வளாகங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜைகள் நடைபெற்றது.
அமைச்சர்
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களின் கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பலராம், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுபாஷினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, காமேஸ்வரி, பொறியாளர் நாராயணசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் தேவராஜன் (நாரணாபுரம்), நாகராஜ் (விஸ்வநத்தம்), லீலாவதி சுப்புராஜ் (சித்துராஜபுரம்), ஒன்றிய கவுன்சிலர் வடமலாபுரம் ஆழ்வார் ராமானுஜம், அ.தி.மு.க. நிர்வாகிகள் வேண்டுராயபுரம் சுப்பிரமணி, கருப்பசாமி, காளிமுத்து, டாக்டர் விஜயஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தடுப்பணை
காரியாபட்டி தாலுகா பந்தனேந்தல் குண்டாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கான பூமி பூஜையை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
இதில் கலெக்டர் கண்ணன், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குண்டாறு வடிநிலக் கோட்டம் அன்புச்செல்வன், காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன், மாவட்ட கழக அவைத் தலைவர் ஜெய பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பிரபாத் வர்மன், நரிக்குடி ஒன்றிய கிழக்கு செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், நரிக்குடி யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் பால்சாமி, மாவட்ட பொருளாளர் குருசாமி, நரிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், முனியாண்டி, நரிக்குடி முன்னாள் யூனியன் தலைவர் ஜெயராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் வேங்கைமார்பன் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் பாலமுருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.