நாமக்கல், ராசிபுரத்தில் பெரியார் நினைவு நாள் கடைபிடிப்பு தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அஞ்சலி
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
மலர்தூவி அஞ்சலி
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று பெரியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து கட்சியினர் அனைவரும் பெரியார் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, நகர பொறுப்பாளர்கள் பூபதி, சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், பாலசுப்பிரமணியம், மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன், மாநில மகளிர் தொண்டர் அணி இணைச்செயலாளர் ராணி, பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், இளைஞரணி அமைப்பாளர் கதிர்வேல், துணை அமைப்பாளர்கள் இளம்பரிதி நந்தகுமார், மதிவேந்தன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரங்கசாமி, விவசாய அணி செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாமக்கல் அண்ணா சிலை அருகே கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பெரியார் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் நீதிநாயகம், நாமக்கல் தொகுதி செயலாளர் ஆற்றலரசு, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பெரியசாமி, நாமக்கல் நகர செயலாளர் வணங்காமுடி, ஒன்றிய செயலாளர் கவுதமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராசிபுரம் நகர திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் பெரியார் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி புதிய பஸ் நிலையம் அருகே நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் ஊர்வலமாக சென்று பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் நகர செயலாளர் பிடல் சேகுவேரா தலைமை தாங்கினார். நகர தலைவர் அன்பரசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலு கலந்துகொண்டு பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய கம்யூனிஸடு் நகர செயலாளர் மணிமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் பழனிசாமி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் மணிமாறன், தி.மு.க. வக்கீல் கீதாலட்சுமி, கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் பூபதி, தசாக்கிய அருந்ததியர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் வீரத்தமிழன், இந்திய கம்யூனிஸ்ட் நகர துணை செயலாளர் சாதிக்பாட்சா, திராவிடர் விடுதலைக் கழகம் நகர அமைப்பாளர் சுமதி மதிவதனி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர்அருள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர துணை செயலாளர் பாலு, மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த ராம்பிரகாஷ், திலஜா, திலீபன், கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொறுப்பாளர் பெரியண்ணன் நன்றி கூறினார்.