திருப்பத்தூரில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரவிழா கருத்தரங்கு கலெக்டர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா கருத்தரங்கு நடந்தது.
திருப்பத்தூர்,
கலெக்டர் சிவன்அருள் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசினார். அப்போது பல்வேறு நாடுகளில் தமிழ்மொழி வழக்கு மொழியாக இருக்கின்றது. மொழிகளிலேயே பழைமை வாய்ந்த மொழி தமிழ்மொழியாகும். தமிழ் மொழியை வளர்க்க தமிழ் வளர்ச்சித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அரசு அலுவலகங்கள் மட்டுமில்லாது அனைத்து வணிக வியாபார நிறுவனங்களும் தமிழ் மொழியில் பெயர் பலகைகள் வைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தமிழ்வளர்ச்சித்துறை மூலமாக தமிழுக்காக பாடுப்பட்ட தமிழறிஞர்களுக்கு பாராட்டு பட்டங்கள், நலத்திட்டயுதவிகள் வழங்கி ஊக்குவித்து வருகின்றனர். உலகில் பல்வேறு நாடுகளில் தமிழ் வளர்ச்சி கழகங்கள், குழுக்கள் செயல்பட்டு அந்நாடுகளில் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து தமிழை வளர்க்க உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு எனது பாராட்டுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். சிறந்த நூலுக்்கான விருது பெற்ற சற்குணபிரபு என்பவரையும் கலெக்டர் பாராட்டினார். நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் வ.சுந்தர், ரத்தினநடராசன், ப.சிவராஜி, கருணாநிதி, சந்தானகிருஷ்ணன், ப.இளம்பருதி, அ.அசோகன், தி.தெய்வசுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.