செஞ்சி் அருகே ஏரி உடைந்து 300 ஏக்கர் நெற்பயிர் சேதம் விவசாயிகள் கவலை
செஞ்சி அருகே ஏரி உடைந்து 300 ஏக்கர் நெற்பயிர் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
செஞ்சி,
செஞ்சி அருகே உள்ள சென்னாலூர் கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
காட்டுப்பகுதியில் அமைந்துள்ளதால் இந்த ஏரி வனத்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இருப்பினும் இந்த ஏரியை விவசாயிகளே பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக வனத்துறையினர், இந்த ஏரியை பராமரிக்கவில்லை. இதனால் மதகு சேதமடைந்தும், கரை பலவீனமடைந்தும் காணப்பட்டது.
ஏரி உடைந்தது
இதனால் மழைக்காலங்களில் இந்த ஏரி நிரம்புவதும், மதகு வழியாக தண்ணீர் வெளியேறி வீணாவதும் வாடிக்கையாக இருந்தது. சமீபத்தில் பெய்த கன மழையால் சென்னாலூர் ஏரி நிரம்பியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏரியின் மதகும், ஏரிக்கரையும் உடைந்து, அதிகளவு தண்ணீர் வெளியேறியது. வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர், விளைநிலங்களுக்குள் புகுந்தது. அங்கு சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களை தண்ணீர் அடித்துச்சென்றது. இதனால் 300 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
தற்காலிகமாக சீரமைப்பு
உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினரும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் விரைந்து வந்து மணல் மூட்டைகள் மூலம் ஏரியின் கரை உடைப்பை தற்காலிகமாக சீரமைக்க முயன்றனர்.
ஆனால் அதிகளவில் தண்ணீர் வந்ததால் கரை உடைப்பை சரிசெய்ய முடியவில்லை. இதனை தொடர்ந்து நேற்று சீரமைக்கும் பணியை தொடங்கினர். பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, வரிசையாக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இந்த பணியை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறவாழி, சுப்பிரமணியன் வனச்சரகர் வெங்கடேசன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தினேஷ், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஏற்கனவே பழுதடைந்த மதகை சீரமைத்திருந்தால் இந்த அளவுக்கு நெற்பயிர்கள் சேதமடைந்திருக்காது. ஏரி தண்ணீரும் வீணாகி இருக்காது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கி உடைப்பை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என்றனர்.