விழுப்புரத்தில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செவ்வாடை பக்தர்கள் 540 பேர் இருமுடி ஏந்தி பயணம்
விழுப்புரத்தில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செவ்வாடை பக்தர்கள் 540 பேர் இருமுடி ஏந்தி பயணம் செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் பிரசித்தி பெற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இந்த சக்தி பீடத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் சார்பில் கடந்த 11-ந் தேதி முதல் செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து இருமுடி ஏந்தி 7 நாட்கள் விரதம் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக சென்று வருகின்றனர். இதுவவரை விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரம் செவ்வாடை பக்தர்கள் சக்திமாலை அணிந்து, இருமுடி ஏந்தி மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று வந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் இருந்து நேற்று காலை செவ்வாடை பக்தர்கள் பஸ், வேன்கள் மூலம் மேல்மருவத்தூருக்கு புறப்பட்டனர். முன்னதாக விழுப்புரம் சக்தி பீடத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடந்தது. இதில் உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது.
540 பக்தர்கள் பயணம்
அதனை தொடர்ந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தின் தலைவர் ஆர்.ஜெயபாலன் தலைமையில் சக்தி மாலை அணிந்து விரதமிருந்த செவ்வாடை பக்தர்கள் 540 பேர் இருமுடி ஏந்தியும், முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியபடியும் விழுப்புரத்தில் இருந்து மேல்மருவத்தூருக்கு புறப்பட்டு அங்குள்ள ஆதிபராசக்தி கோவிலில் நடந்த சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக இவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ரத்தினசிகாமணி, இணை செயலாளர்கள் திரிபுரசுந்தரி, சண்முகம், வசுந்தராதேவி, மணிவாசகம், காளிதாஸ், வட்ட தலைவர்கள் பழனி, தர்மலிங்கம், பார்த்தசாரதி, முனுசாமி, மகாலிங்கம், மணிகண்டன், மோகனகிருஷ்ணன், தனசேகரன், பாலகுரு, சிகாமணி, சாந்திசுந்தர்ராஜன், பாலகண்ணன் மற்றும் சக்திபீட பொறுப்பாளர்கள் சண்முகம், மாரிமுத்து, சீத்தாராமன், பாண்டுரங்கன், சரவணன், மணி, பாவாடைராயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட தலைவர் ஜெயபாலன் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்து 2 லட்சம் பக்தர்கள் சக்தி மாலை அணிந்து இருமுடி ஏந்தி மேல்மருவத்தூர் கோவிலுக்கு ஆன்மிக பயணம் செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் கீழ் 549 கிளை மன்றங்கள் உள்ளன. இந்த மன்றங்களின் மூலம் இந்த ஆண்டும் 2 லட்சம் பக்தர்கள், மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்த மாதம் (ஜனவரி) 28-ந் தேதி வரை செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து, இருமுடி ஏந்தி மேல்மருவத்தூர் செல்ல அனைத்து வசதிகளையும் செய்து வருகிறோம். மேல்மருவத்தூர் செல்ல விரும்புபவர்கள் மாவட்ட, வட்ட தலைவர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகளை அணுகலாம் என்றார்.