சாலையில் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.
கொள்ளிடம் டோல்கேட்,
ஸ்ரீரங்கம் கன்னிமார் தோப்பு பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திகேயன் (வயது 36). இவர் தற்போது நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் கிராமத்தில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.
திருச்சியில் உள்ள டைல்ஸ் விற்பனை கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த கார்த்திகேயன், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.
லாரி மீது மோதி சாவு
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நம்பர் 1 டோல்கேட், அடுத்து மாருதி நகர் அருகே உள்ள ெரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் நின்று கொண்டிருந்த லாரி பின் பகுதியில் கார்த்திகேயன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில், விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.