எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு அ.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர்.நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க.உள்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்று மாலை அணிவித்தனர்.
புதுக்கோட்டை,
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்.நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு. அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் செல்லத்துரை தலைமையில் நகர செயலாளர் பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்று மாலை அணிவித்தனர். தே.மு.தி.க சார்பில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் கட்சியினர் மாலை அணவித்தனர். மக்கள் நீதி மையம் சார்பில் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் கட்சியினர் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர்
விராலிமலையில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அவர் அங்குள்ள ஜல்லிக்கட்டு காளைக்கும் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆவின்சேர்மன் பழனியாண்டி, மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, விராலிமலை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் திருமூர்த்தி மற்றும் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி
அறந்தாங்கியில் ரெத்தினசபாதி எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியகடைவீதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பெரியசாமி, வேலாயுதம், நகர செயலாளர் ஆதிமோகனகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல் அ.ம.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளின் சார்பிலும் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மணமேல்குடி
மணமேல்குடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம் தலைமையில் பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சந்தைபேட்டை வந்தனர். பின்னர்அங்கு இருந்த எம்.ஜி.ஆர்.உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சந்திரன், கணேசன், கோட்டைராஜமாணிக்கம், முத்துசாமி, லியாகத்தலி, ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆர்.நினைவுதின நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கூத்தையா தலைமை தாங்கினார். அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜநாயகம், மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் லியாக்கத்தலி, ஆவுடையார் கோவில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நரேந்திரஜோதி, ஒன்றிய பாசறை செயலாளர் விஜயகுமார் மற்றும் கட்சியினர் எம்.ஜி.ஆர்.உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி ெசலுத்தினர்.
ஆலங்குடி
ஆலங்குடியில் அ.ம.மு.க.சார்பில் கலைஞர் சாலையில் எம்.ஜி.ஆர்.உருவப்படத்தை அலங்கரித்து மாலை அணிவித்தனர். இதில் ஒன்றிய அவைத்தலைவர் கண்ணன், ஒன்றியச்செயலாளர் பொட்டு, நகர் செயலாளர் ஏ.என். இளங்கோவன் மற்றும் பலர் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்தனர். அதேபோல் அ.தி.மு.க. நகர் பொறுப்பாளர்கள் ஆலங்குடி சந்தைப்பேட்டையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கறம்பக்குடி
கறம்பக்குடி ஒன்றிய, நகர அ.தி.மு.க.சார்பில்் சீனி கடைமுக்கத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மீன்கடை முக்கத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். இதே போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அன்னவாசல்
அன்னவாசலில் அ.தி.மு.க. நகரஅவைத்தலைவர் சாலைமதுரம் தலைமையில் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் சாம்பசிவம், நகர செயலாளர் அப்துல்அலி உள்ளிட்ட பலர் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.