அரியலூரில் தேர்தல் பிரசாரம்: எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார் என்று அரியலூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
அரியலூர்,
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்பதனை முன்னிறுத்தி தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நேற்று அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதையொட்டி அரியலூர் வந்த அவர், புறவழிச்சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தையும், கருணாநிதி சிலையையும் திறந்து வைத்து கட்சிக்கொடி ஏற்றினார். பின்னர் பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு பஸ் நிலையம் எதிரே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதையடுத்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-
மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது செயல்படாத ஆட்சியை நடத்துவதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தன்னை அமைச்சராக்கிய ஜெயலலிதாவிற்கும், முதல்-அமைச்சராக்கிய சசிகலாவிற்கும் உண்மையாக இல்லாதவர் பழனிசாமி. நெடுஞ்சாலைத்துறையில் தனது உறவினருக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு டெண்டர் விட்டு ஊழல் செய்துள்ளார்.
234 தொகுதிகளிலும் வெற்றி
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை பொதுமக்கள் அடித்து விரட்டினார்கள் என்று பேசியதற்காக என் மீது வன்முறையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார். பொதுமக்கள் அனைவரும் நான்கு மாதங்களில் வரக்கூடியசட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து 234 தொகுதிகளிலும் வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட அவர் மார்க்கெட் தெருவில் தி.மு.க. வணிகர் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்டார். மேலும் வணிகர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் அரியலூர் மாவட்ட தி.மு.க. பூத்கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவசங்கர் மற்றும் அனைத்து அணி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சிறை செல்வது உறுதி
இதேபோல் திருமானூர் ஒன்றியத்தில் கண்டிராதித்தம், தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான், தா.பழூர் கடைவீதி, ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், ஆண்டிமடம் நான்கு ரோடு, விளந்தை ஆகிய இடங்களில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டபோது பேசியதாவது;-
கொரோனாவிலும் ஊழல் புரிந்த தமிழக அரசை கண்டு கொரோனாவே அச்சமடைந்துள்ளது. கொரோனாவில் நாடு வளர்ச்சி எதுவும் காணவில்லை. கண்டிராதித்தம் சோழமாதேவி ஏரியை தூர்வாரியதில் முறைகேடு செய்துள்ளதாக பொதுமக்கள் அளித்த புகார், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஒன்பதரை ஆண்டுகளில் ஊழல்கள் புரிந்த முதல்-அமைச்சர், அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்களாகிய நீங்கள் கொடுத்த வெற்றியை விட அதிக வெற்றியை வருகிற சட்டமன்ற தேர்தலிலும் கொடுக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள், விவசாயிகளுக்கு தி.மு.க. என்றும் துணை நிற்கும். தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடந்து வருகிறது. அந்த ஆட்சியை அகற்ற தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்.
‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு
தமிழக அரசு, மத்திய அரசின் அழுத்தத்திற்கு பணிந்து நீட் தேர்வை தமிழகத்தில் அமல்படுத்த ஒப்புக்கொண்டது. அரியலூர் மாவட்டத்தில் அனிதா, விக்னேஷ் ஆகியோர் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தரப்படும்.இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அவர் கீழப்பழுவூரில் உள்ள மொழிப்போர் தியாகி சின்னச்சாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கண்டிராதித்தம் கிராமத்தில் உள்ள சோழமாதேவி ஏரியை பார்வையிட்டார்.