நினைவு நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
நினைவு நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
அரியலூர்,
அரியலூரில் மாவட்டஅ.தி.மு.க. சார்பில் கட்சியின் நிறுவனரும், மறைந்த முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மங்காயி பிள்ளையார் கோவில் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவப்படத்துடன் கட்சியினர் மவுன ஊர்வலமாக தேரடி, மார்க்கெட் தெரு வழியாக சென்று பஸ் நிலைய வாசலில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கணேசன், பொருளாளர் அன்பழகன், மாணவர் அணி செயலாளர் சங்கர், தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், கூட்டுறவு ஒன்றிய தலைவர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்ரமணியன், செல்வராசு, நகர செயலாளர் செந்தில் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம்,ஆண்டிமடம்
இதேபோல் ஜெயங்கொண்டம் அ.தி.மு.க. சார்பில் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் இருந்து ஊர்வலமாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக உள்ளஎம்.ஜி.ஆர். சிலைக்கும், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் இளைஞரணி துணை செயலாளர் அறிவு என்ற சிவசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் கல்யாணசுந்தரம், தங்கபிச்சமுத்து, நகர செயலாளர் பி.ஆர்.செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் ராஜாரவி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஜெகன்ராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஆண்டிமடத்தில் ஒன்றியக்குழு தலைவரும், ஆண்டிமடம் வடக்கு ஒன்றிய செயலாளருமான மருதமுத்து தலைமையில் அ.தி.மு.க.வினர் விளந்தை அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று ஆண்டிமடம் பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட கவுன்சிலரும், ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய செயலாளருமான ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ரீடு.செல்வம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தா.பழூர், செந்துறை
தா.பழூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தா.பழூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக கட்சி தொண்டர்கள் கலந்து கொண்ட அமைதி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் ஒன்றிய அவை தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் சசிகுமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் மைக்கேல், அனைகுடம் கூட்டுறவு சங்க இயக்குனர் அறிவழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசு, ஒன்றியக்குழு உறுப்பினர் பபிதா உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கூட்டுறவு வங்கி தலைவர் கொளஞ்சிநாதன் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விக்கிரமங்கலம்,உடையார்பாளையம்
விக்கிரமங்கலத்தில் தா.பழூர் மேற்கு பகுதி அ.தி.மு.க.வினர் விக்கிரமங்கலம் கடைவீதி மற்றும் முக்கிய தெருக்களின் வழியாக எம்.ஜி.ஆர். உருவப்படத்துடன் மவுன ஊர்வலம் சென்றனர். பின்னர் விக்கிரமங்கலம் கடைவீதியில் உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் தா.பழூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன், ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், தா.பழூர் ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி வீரமணிகண்டன், ஒன்றியக்குழு துணை தலைவர் கண்ணன், மாணவரணி ஒன்றிய செயலாளர் மலர்மன்னன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் அம்பாப்பூர் கலியபெருமாள், கோவிந்தபுத்தூர் இந்திரா கதிரேசன், கீழநத்தம் மாலா பாக்கியராஜ், உல்லியக்குடி கல்பனா சண்முகம், குணமங்கலம் ராமச்சந்திரன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உடையார்பாளையத்தில் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சையத்மகதூம், முன்னாள் பேரூராட்சி தலைவர் வெங்கட்ராமன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை, வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.