நினைவு நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
நினைவு நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை.
பெரம்பலூர்,
எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அவருடைய முழு உருவ சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் தந்தை பெரியார் நாளையொட்டி, அவரது சிலைக்கும் அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணசாமி (வேப்பூர் தெற்கு), என்.கே.கர்ணன் (ஆலத்தூர் கிழக்கு), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை மேற்கு), செல்வகுமார் (பெரம்பலூர்), ரவிச்சந்திரன் (வேப்பந்தட்டை கிழக்கு), சசிகுமார் (ஆலத்தூர் மேற்கு), செல்வமணி (வேப்பூர் வடக்கு) மற்றும் மாவட்ட இணை செயலாளர் ராணி, துணை செயலாளர் லெட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர் ராஜேஸ்வரி உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.