டி.வி.நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஆர்.டி.ஓ. விசாரணை முடிந்தது

டி.வி.நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஆர்.டி.ஓ. விசாரணை முடிந்தது.

Update: 2020-12-24 21:41 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

சின்னத்திரை நடிகை சித்ரா, செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் சில நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 6-ம் நாள் விசாரணைக்கு பின் கடந்த 14-ந்தேதி ஹேம்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சித்ரா தற்கொலை குறித்து காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஒ. திவ்யஸ்ரீ விசாரணை செய்து வந்தார். சித்ராவின் தாய், தந்தை, சகோதரி, சகோதரர், மற்றும் ஹேம்நாத்தின் தாய், தந்தை அகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்தினார்.

3 கட்டமாக நடத்திய விசாரணைக்கு பிறகு சித்ராவின் உடன் நெருங்கிய வட்டாரங்களில் விசாரிக்க முடிவு செய்து சித்ரா தற்கொலை செய்து கொண்ட விடுதியின் ஊழியர்கள், அவருடன் கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள், சித்ராவின் வீட்டின் அருகில் வசிப்பார்கள் மற்றும் சித்ராவுக்கு நெருக்கமானவர்களிடம் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் ஆர்.டி.ஓ., திவ்யஸ்ரீ இறுதி கட்டமாக சித்ராவின் உதவியாளர் ஆனந்தனிடம் நேற்று விசாரணை நடத்தினார். சுமார் 2 மணிநேரமாக ஆனந்தனிடம் விசாரணை நடத்தினார். இத்துடன் விசாரணை முடிந்தது.

விசாரணை அறிக்கையை தயார் செய்து விரைவில் பூந்தமல்லி போலீஸ் உதவி கமிஷனரிடம் வழங்க முடிவு செய்து உள்ளதாக ஆர். டி.ஓ., திவ்யஸ்ரீ தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்