காங்கிரசில் இருந்ததில் எந்த வருத்தமும் இல்லை - நடிகை ஊா்மிளா பேட்டி

காங்கிரசில் இருந்ததில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என நடிகை ஊர்மிளா மடோன்கர் கூறியுள்ளார்.

Update: 2020-12-24 22:00 GMT
மும்பை,

நடிகை ஊர்மிளா மடோன்கர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் அவர் அந்த கட்சியில் இருந்து விலகினார். தற்போது அவர் சிவசேனாவில் இணைந்து உள்ளார். அவரது பெயர் கவர்னரால் நியமிக்கப்படும் மேல்-சபை உறுப்பினர் பதவிக்கு மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் மக்களின் நாயகி. ஏ.சி. அறையில் இருந்து கொண்டு டுவிட்டரில் பதிவிடும் ஒரு தலைவராக இருக்க நான் விரும்பவில்லை. என்ன செய்ய வேண்டும், எதை செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். மேலும் நான் கற்று கொண்டு வருகிறேன்.

காங்கிரஸ் கட்சியில் இருந்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 6 மாதங்களுக்கும் குறைவாகவே அந்த கட்சியில் இருந்தேன். 28 நாட்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிரசாரம் செய்தது நல்ல நினைவுகளை கொடுத்து உள்ளது. வருத்தங்களை மனதிலேயே வைத்து கொள்ளும் நபர் நான் கிடையாது. கட்சியில் இருந்து விலகிய போது கூட நான் காங்கிரசுக்கு எதிராக பேசவில்லை. அப்படி இருக்கும்போது, இப்போது ஏன் பேச வேண்டும்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கடந்த ஓராண்டாக சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறது. கொரோனா, இயற்கை பேரிடர் காலங்களில் சிறப்பாக மக்கள் நலன் காக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்