சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,450-க்கு விற்பனை
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்து 450-க்கு விற்பனை ஆனது.
மல்லிகைப்பூ ரூ.2,450
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 40 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 5 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.
இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்து 450-க்கும், முல்லை ரூ.1,240-க்கும், காக்கடா ரூ.1,100-க்கும், செண்டுமல்லி ரூ.90-க்கும், ஜாதிமல்லி ரூ.1,250-க்கும், கனகாம்பரம் ரூ.810-க்கும், சம்பங்கி ரூ.130-க்கும், அரளி ரூ.250-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் விற்பனை ஆனது.
விலை உயர்வு
அதேபோல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்து 800-க்கும், முல்லை ரூ.1,080-க்கும், காக்கடா ரூ.1,000-க்கும், செண்டுமல்லி ரூ.90-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.1,240-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.240-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது.
நேற்று முன்தினத்தை விட நேற்று ஒரு கிலோ முல்லை ரூ.160-ம், காக்கடா ரூ.100-ம், ஜாதிமல்லி ரூ.500-ம், சம்பங்கி ரூ.50-ம், அரளி ரூ.10-ம் விலை உயர்ந்திருந்தது. மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.350-ம், கனகாம்பரம் ரூ.430-ம் குறைந்திருந்தது.