வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு - பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-12-24 15:10 GMT
விழுப்புரம், 

தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட அரசை வலியுறுத்தியும் சென்னையில் கடந்த 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு பிறகும் வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ஹரிகரன் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, மாநில துணை பொதுச்செயலாளர் சிவக்குமார், மாநில துணை அமைப்பு செயலாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் செல்வக்குமார் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோடி, தொகுதி செயலாளர் சீனுவாசன், மாவட்ட துணை செயலாளர் பெருமாள், மாவட்ட துணைத் தலைவர்கள் லட்சுமி நாராயணன், அரிகிரு‌‌ஷ்ணன், அருள், விஜயன், ராஜா, ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், சம்பத், கார்த்திகேயன், ஏழுமலை, சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் கணல் பெருமாள் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு துணை செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். போராட்டக்குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பேராசிரியர் தீரன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் வெங்கடாசல ரெட்டியார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நெடி சுப்பிரமணி, பூங்காவனம், மாநில நிர்வாக குழு மணிமாறன், தேர்தல் பணிக்குழு துணைத்தலைவர் ரங்கநாதன், மாநில சட்ட பாதுகாப்பு அணி துணை செயலாளர் வக்கீல் கலியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் அய்யனார், மகளிர் அணி மாவட்ட பொருளாளர் மாலா சிவகுமார், ஒன்றிய செயலாளர் முருகன், முன்னாள் நகர செயலாளர் ரகுபதி, நிர்வாகிகள் கோபி, சிவா, அம்பிகா, இளைஞரணி சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர அமைப்பாளர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு வன்னியர் சங்கம், பா.ம.க. சார்பில் பா.ம.க. நகர செயலாளர் சுதாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச்செயலாளர் தங்கஜோதி, முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் அன்பழகன், முன்னாள் மாவட்ட செயலாளர் துரை சுப்பிரமணியன், ஒன்றிய வன்னியர் சங்க தலைவர் முத்து மகாலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் கோபி, சந்தோ‌‌ஷ், சிவராமன், உதயகுமார், வட்டார பொறுப்பாளர் அருணாசலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, வக்கீல் ராமர், மாவட்ட மாணவரணி துணை தலைவர் இருவேல்பட்டு அரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கோட்டக்குப்பத்தில் நகர தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. தன்ராஜ் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட துணைத் தலைவர் பூராசாமி தலைமையிலும், அரகண்டநல்லூரில் மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணக்குமார் தலைமையிலும், அனந்தபுரத்தில் நகர தலைவர் முரளிதரன் தலைமையிலும், மரக்காணத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரமே‌‌ஷ் தலைமையிலும் பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர்கள் அனைவரும் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அனந்தபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கனல் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் பா.ம.க. அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் பேராசிரியர் தீரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் அய்யனார், ஜெயக்குமார், அனந்தபுரம் நகர செயலாளர் முரளி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ், முன்னாள் நகர செயலாளர் பூபாலன், செஞ்சி ஒன்றிய செயலாளர் முருகன், மலையனூர் முன்னாள் சேர்மன் அன்பழகன், நிர்வாகிகள் கணேசன், விஜய் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்