கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க.வினர் போராட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,.
வன்னியர்களுக்கு தனியாக 20 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க. சார்பில் பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சின்னசேலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சின்னசேலம் நகர செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார். வன்னியர் சமுதாய மக்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரி பா.ம.க.வினர் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பேரூராட்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் மாநில மகளிர் அணி செயலாளர் காசாம்பூ பூமாலை, மாவட்டசெயலாளர் சரவணன், சட்டப்பாதுகாப்பு மாவட்ட தலைவர் அண்ணாதுரை, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன், மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்வாணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில நிர்வாகிகள் சுரேஷ்குமார், தவஞானம், மாவட்ட நிர்வாகிகள் பாண்டியன், பாலு, ரவி மற்றும் முன்னாள் ஒன்றிய செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில அமைப்புச் செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். இதில் நகர பொறுப்பாளர் ராஜகணபதி, நிர்வாகி பாலாஜி, நகர தலைவர் மகேஷ், ஒன்றிய செயலாளர்கள் பழனி, வீரமணி, வீரன், சக்திவேல் ,பாண்டியன் உள்ளபட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.
சங்கராபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு. பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் பப்லு தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் லோகநாதன், வேல்முருகன், மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் அஞ்சுகம், நகர செயலாளர் ஜெகன், ஒன்றிய செயலாளர் தங்கராசு, மகேந்திரன், மணிவண்ணன், வன்னியர் சங்க தலைவர் ராஜா, செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
வடக்கனந்தல் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு .நகர செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பன், ராஜா, மாவட்டதுணைச்செயலாளர் நீலமேகம், பசுமைதாயகம் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு துணை செயலாளர் சின்னதுரை வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுச்செயலாளர் ஆர். ரமேஷ், மாநில சமூக நீதி பேரவை துணை செயலாளர் சிவராமன், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட துணை செயலாளர் சின்னதுரை, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மணிகண்டன், இளைஞர் சங்க ஒன்றிய செயலாளர் கார்த்தி, முன்னாள் நகர செயலாளர் மணி, நகர இளைஞரணி தலைவர் ராஜா, நகர தலைவர் ரங்கன், நகர இளைஞரணி செயலாளர் எம்.கார்த்தி, ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருக்கோவிலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், வக்கீல் ராஜ்குமார், சங்கர் கணேஷ், ஆனந்தன், துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கேபிள் சரவணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பால சக்தி கண்டன உரையாற்றினார். இதில் திருக்கோவிலூர் தொகுதி செயலாளர் வக்கீல் சரவணகுமார், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் குமரகுருபரன், மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி மாரிமுத்து, மாநில துணை அமைப்பு டெல்லி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் செல்லபிள்ளைவிடம் மனு அளிக்கப்பட்டது. முடிவில் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் வழி சுந்தர் நன்றி கூறினார்.
அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு நிர்வாகி வக்கீல் சரவணகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பால சக்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் அப்பா செழியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணலூர்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு மாநில துணை தலைவர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.