போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் நெல்லை கிளை சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-12-24 03:45 GMT
நெல்லை,

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் நெல்லை கிளை சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. சங்க உறுப்பினர் சின்னத்துரையை தாக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் ஜோதி கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். அப்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பெருமாள், சுந்தர்சிங், காமராஜ், பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்