பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தர்ணா

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி தர்ணா போராட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2020-12-24 00:42 GMT
கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி தர்ணா போராட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஜெயவேல்காந்தன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார். இதில் செந்தில், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் நடப்பு ஆண்டிற்கான (2020-21) காலியிட மதிப்பீடு அறிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் விகிதாச்சாரத்திற்கு உட்பட்டு மறுநிர்ணயம் செய்யப்பட வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்திரவாதப்படுத்தி அரசாணை வெளியிடப்பட வேண்டும். துணை ஆட்சியர் பட்டியலை நீதிமன்ற தீர்ப்பு மற்றும் இடஒதுக்கீட்டிற்கு உட்பட்டு விரைவாக வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களின் 12 அம்ச கோரிக்கைகள் மீது உடன் அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்