5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டமும், மனு கொடுக்கும் இயக்கமும் நேற்று நடந்தது. சத்துணவு ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். சட்டரீதியான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணிஇடங்களை உடனே நிரப்பிட வேண்டும். பள்ளிகளில மாணவர்களுக்கு மானியஉதவியை தலா ரூ.5 ஆக உயர்த்தவேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆனந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கொளஞ்சி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். பின்பு கோரிக்கைகள் அடங்கிய மனு கலெக்டரிடம் கொடுக்கப்பட்டது.
தாமரைக்குளம்
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தி்ன் மாவட்ட தலைவர் (பொறுப்பு) கொளஞ்சியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சங்கீதா கோரிக்கைகள் குறித்து பேசினார். தலைவர் பஞ்சாபிகேசன் ெதாடக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.