எழுமலை அருகே தனி ரேஷன்கடை கேட்டு கிராம மக்கள் போராட்டம்
எழுமலை அருகே தனி ரேஷன்கடை கேட்டு கிராம மக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி,
எழுமலை அருகே உள்ளது உலைப்பட்டி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூலப்புரத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது ஒருவர் கொலை செய்யப்பட்டார். உலைப்பட்டி கிராம மக்கள் சூலப்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வந்தனர். ஆனால் இரண்டு கிராம மக்களிடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலினால் உலைப்பட்டி கிராம மக்கள் சூலப்புரத்தில் உள்ள ரேஷன் கடையில் பொருட்களை வாங்க இயலாது, எனவே தனியாக எங்கள் கிராமத்திலேயே ரேஷன் கடை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாகவே இந்த கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்காத நிலையில் நேற்று செல்போனில் ரேஷன் பொருட்கள் வாங்கியது போல் குறுந்தகவல் வந்ததாக தெரிகிறது.
போராட்டம்
இதையடுத்து உலைப்பட்டி கிராம மக்கள், நேற்று மாலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் எங்களுக்கு ரேஷன் பொருள்களை உடனே வழங்க வேண்டும், அத்துடன் எங்கள் கிராமத்திலேயே தனியாக ரேஷன் கடை அமைத்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும் கோரிக்கை நிறைவேறாதபட்சத்தில் தொடர் போராட்டம் நடத்தும்வகையில் அங்கேயே சமைத்து சாப்பிட தேவையான பொருட்களை கிராம மக்கள் கொண்டு வந்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசாரும், வருவாய்த் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.