அகஸ்தீஸ்வரம் யூனியனில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1¼ கோடி நிதி கேட்டு அரசிடம் பரிந்துரை தலைவர் தகவல்
அகஸ்தீஸ்வரம் யூனியனில் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1¼ கோடி நிதி அரசிடம் கேட்டு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது என்று யூனியன் தலைவர் அழகேசன் கூறினார்.
கன்னியாகுமரி,
அகஸ்தீஸ்வரம் யூனியன் கூட்டம் கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள யூனிய அலுவலக அவைக்கூடத்தில் நேற்று நடந்தது. யூனியன் தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சண்முகவடிவு, வட்டார வளர்ச்சி அலுவலர் பெர்பெச்சுவல் ரொஸிட்டா, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் நீலபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
யூனியன் கவுன்சிலர்கள் அருண்காந்த் (தி.மு.க.), ராஜேஷ் (அ.தி.மு.க.), ஆரோக்கிய சவுமியா (தி.மு.க.), பால்தங்கம் (பா.ஜ.க.), பொறியாளர்கள் கவிதா, கீதா, பணிமேற்பார்வையாளர்கள் உமாபகவதி, ராஜேஸ்வரி, துணைவட்டாரவளர்ச்சி அலுவலர் (பொது) பிரேமலதா, கணக்கர், ஜாண்சன், இளநிலை உதவியாளர் நந்தினி உள்பட பலர்கலந்து கொண்டனர்.
ரூ.1¼ கோடி நிதி
கூட்டத்தில், யூனியன் தலைவர் அழகேசன் பேசும்போது, அகஸ்தீஸ்வரம் யூனியனில் உள்ள பஞ்சாயத்துகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அரசிடம் ரூ.1¼ கோடி நிதி கேட்டு பரிந்துரை கடிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. விரைவில் அரசிடம் இருந்து நிதி வர உள்ளது. அதன்பிறகு அனைத்து பஞ்சாயத்துகளிலும் வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்படும் என்றார்.
யூனியன் துணைத்தலைவர் சண்முகவடிவு பேசும்போது, எங்களது கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த திட்டப்பணிகள் தொடங்கினாலும் அதிகாரிகள் எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.
தீர்மானங்கள்
கூட்டத்தில், யூனியன் அலுவலகம் முன்பு இ-சேவை மையம், சிற்றுண்டி மற்றும் உணவகம் அமைப்பது. லீபுரம் மற்றும் பஞ்சலிங்கபுரம் ஆகிய பஞ்சாயத்துகளில் கூடுதலாக 2 ஐஸ் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் நடத்த அனுமதி அளிப்பது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.