கோவில்பட்டியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கோவில்பட்டியில் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-23 04:26 GMT
கோவில்பட்டி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களையும், மின்சார திருத்த சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து ரத்ததான கழகங்கள், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, அனைத்து கட்சி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். ரத்ததான கழகங்களின் ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் கேசவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், ஐ. என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார், தொழிலாளர் முன்னேற்ற சங்க நகர தலைவர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்