குற்றாலத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது
குற்றாலத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது.
தென்காசி,
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் கருங்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மன்மத ராஜ் (வயது 35). இவர் சங்கரன்கோவில் அருகில் குருவிகுளத்தில் உள்ள பள்ளியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அந்த பள்ளியில் இவரிடம், அதே ஊரைச் சேர்ந்த ஒரு மாணவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படித்து உள்ளார். அப்போது ஆசிரியருக்கு மாணவியை நன்கு தெரியும். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியரிடம் மாணவி பாடம் தொடர்பாக சந்தேகம் கேட்டு உள்ளார். அதற்கு ஆசிரியர் நேரில் கூறுகிறேன். தற்போது நான் குற்றாலத்தில் உள்ளேன் அங்கு வா என்று கூறியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த மாணவி குற்றாலத்திற்கு வந்தார். குற்றாலத்தில் உள்ள ஒரு பூங்காவில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மன்மத ராஜ் மாணவியிடம் தவறுதலாக பேசி கையை பிடித்து இழுத்து அத்துமீறியதாக கூறப்படுகிறது. உடனே அந்த மாணவி அவரிடம் இருந்து விடுபட்டு குற்றாலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மன்மதராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.