பாளையங்கோட்டை அருகே பயங்கரம்: சொத்துத்தகராறில் பெண் அடித்துக்கொலை உறவினருக்கு போலீ்ஸ் வலைவீச்சு

பாளையங்கோட்டை அருகே சொத்துத்தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-12-23 03:11 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள நொச்சிகுளத்தை சேர்ந்தவர் கோபால். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 60). இவருக்கும், உறவினரான பேரன் உறவுமுறை கொண்ட மைனர் முத்து என்பவருக்கும் இடையே சொத்துத்தகராறு இருந்து வந்தது. மாரியம்மாள் குடியிருந்த வீட்டை மைனர் முத்து எழுதி கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. ஏற்கனவே,, மாரியம்மாளை மைனர் முத்து தாக்கியது தொடர்பாக சிவந்திப்பட்டி போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அடித்துக்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாரியம்மாள் வீட்டிற்கு சென்ற மைனர் முத்து அவரிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது மாரியம்மாளை மைனர் முத்து கம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்ற மாரியம்மாளின் மகன் சண்முகராஜ் (36), மருமகள் மனோரமா (30) ஆகியோரும் தாக்கப்பட்டனர்.

இதில் காயம் அடைந்த மாரியம்மாள் உள்ளிட்ட 3 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மைனர் முத்துவை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்