தஞ்சையில் 3 இடங்களில் போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி தஞ்சையில் 3 இடங்களில் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக நகர பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொ.மு.ச. மத்திய சங்க துணைப் பொதுச் செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை கும்பகோணம்-நாகை மண்டல தொ.மு.ச. பொதுச் செயலாளர் பாண்டியன் தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க வேண்டும். முழுமையான அளவு பஸ் இயக்கத்தை தொடங்க வேண்டும். வரவுக்கும்-செலவிற்குமான வித்தியாச தொகையை மானியமாக போக்குவரத்து கழகங்களுக்கு அரசே வழங்க வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்.
நிலுவைத் தொகை
முழுமையான அளவு பஸ்கள் இயக்கப்படாததால் பணி கிடைக்காமல் திரும்பும் தொழிலாளர்களுக்கு வருகை பதிவு வழங்க வேண்டும். 16 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு-பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன் முடித்து வைத்து பேசினார். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மத்திய சங்க நிர்வாகிகள் கஸ்தூரி, தங்கராசு, சி.ஐ.டி.யூ. மத்திய சங்க நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ராமசாமி, செங்குட்டுவன், ஐ.என்.டி.யூ.சி. மத்திய சங்க பொருளாளர் சரவணன், கிளை நிர்வாகி மணிகண்டன், தொ.மு.ச. நிர்வாகிகள் கோவிந்தராஜ், ஜெயபால், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொ.மு.ச. நிர்வாகி கலியமூர்த்தி நன்றி கூறினார்.
வேலை நிறுத்தம்
முன்னதாக கும்பகோணம்-நாகை மண்டல தொ.மு.ச. பொதுச் செயலாளர் பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, கடந்த 15-ந் தேதி நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உறுதியளித்தபடி அடுத்தமாதம்(ஜனவரி) 6-ந் தேதி 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் அன்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறும் என்றார்.
தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கரந்தையில் உள்ள அரசு போக்குவரத்து கழக புறநகர் பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. கிளை செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.