கியாஸ் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் சமையல் கியாஸ் விலைஉயர்வை கண்டித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-12-22 06:15 GMT
கியாஸ் விலை உயர்வை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம்
நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தண்டபாணி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள.

இதில் வில்வநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, மாவட்ட துணைச்செயலாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.மோகன், துணை அமைப்பாளர் டி.என்.டி.சுபாஷ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் டி‌.பி.ரமேஷ் மற்றும் மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சிந்துஜா ஜெகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்