பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு தண்ணீர் குடிக்க கூட்டமாக வரும் யானைகள்

பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு கூட்டமாக யானைகள் தண்ணீர் குடிக்க வருகின்றன.

Update: 2020-12-22 04:45 GMT
பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானைகள்
கூட்டமாக வரும் யானைகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. பவானிசாகர் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் அணையின் நீர்த்தேக்க பகுதி அமைந்துள்ளது.

அணையின் தற்போதைய நீர்மட்டம் 94 அடியாக உள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது கூட்டம் கூட்டமாக நீர்த்தேக்க பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன.

தண்ணீரை குடித்தன
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நீர்த்தேக்க பகுதிக்கு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்தன. அதைத்தொடர்ந்து அவை அணை நீர்த்தேக்கத்தில் இறங்கி ஆனந்த குளியல் போட்டன. பின்னர் தாகம் தீர துதிக்கையால் உறிஞ்சி தண்ணீரை குடித்தன. அதன்பின்னர் அணை மேல்பகுதியில் உள்ள தார் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.

அணையின் நீர்த்தேக்க பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் கால்நடை மேய்ச்சலில் ஈடுபடுவோர், பொதுப்பணித்துறையினர், மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்