சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்தது.

Update: 2020-12-22 03:57 GMT
சேலம்,

சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்தது. அதன்படி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடிய விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் வசந்தா மயில்வேல் தலைமை தாங்கினார். மகளிர் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் சங்கீதா நீதிவர்மன் முன்னிலை வகித்தார். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பொதுமக்களை பாதிக்கக்கூடிய கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்