சிவகங்கையில் மின்வாரிய ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்; ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனத்துக்கு எதிர்ப்பு

ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படும் என்ற அரசு உத்தரவை திரும்ப பெறக்கோரி சிவகங்கையில் மின்வாரிய ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.;

Update: 2020-12-22 03:10 GMT
சிவகங்கையில் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
தொடர் காத்திருப்பு போராட்டம்
மின்வாரிய அனைத்து சங்கங்கள் சார்பில் நேற்று ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யும் அரசின் உத்தரவைதிரும்ப பெற கோரியும், முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்றுகொண்டபடி தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் மின்வாரிய பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

அந்த வகையில் சிவகங்கையில் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள மின்வாரிய பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அனைத்து சங்கங்களை சேர்ந்தவர்களும் வந்து அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த பணிநியமனத்துக்கு எதிர்ப்பு
காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறும்போது, ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் உத்தரவை அரசு வாபஸ் பெற வேண்டும்.

எங்களின் கோரிக்கைகளை நிறைவேறாதபட்சத்தில் இரவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.மின்ஊழியர்களின் தொடர் காத்திருப்பு போராட்டத்தால் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று மின்வாரிய பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

பின்னர் இரவில் தங்கள் போராட்டத்ைத கைவிட்ட னர்.

மேலும் செய்திகள்