பொட்டல்குளம் அய்யன்மலை அய்யப்ப சாமி கோவிலுக்கு திருஆபரண ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொட்டல்குளம் அய்யன் மலை அய்யப்ப சாமி கோவிலுக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில் திருஆபரண ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டனர்.

Update: 2020-12-22 01:53 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே உள்ள பொட்டல்குளம் அய்யன் மலையில் குபேர அய்யப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அய்யப்ப சாமிக்கு கலப்பை மக்கள் இயக்கத்தலைவர் பி.டி. செல்வகுமார் தனது சொந்த செலவில் திரு ஆபரணங்கள் நன்கொடையாக வழங்கினார்.

இந்த திருஆபரணங்கள் ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலம் புன்னார்குளம் சந்திப்பில் இருந்து தொடங்கியது. கலப்பை மக்கள் இயக்க நிறுவனத்தலைவரும் சினிமா தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் ஆபரணபெட்டியை மேளதாளம் முழங்க குதிரைகள் அணிவகுப்புடன் ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலில் ஒப்படைத்தார். அதை கோவில் நிறுவனர் தியாகராஜசுவாமிகள் பெற்றுக்கொண்டார்.

திரளான பக்தர்கள்

ஊர்வலத்தில் கலப்பை மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவர் மீனாதேவ், கலப்பை மக்கள் இயக்க குமரி மாவட்ட தலைவர் சிவபன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ்தில் கலப்பை மக்கள் இயக்க மகளிர் அணி செயலாளர் ரெங்கநாயகி, மாவட்ட செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், பொருளாளர் ராமதாணுலிங்கம், எஸ்.எம்.சி.கூட்டுறவு வீட்டுவசதி சங்க தலைவர் விஜய்கிருஷ்ணன், உலக இந்துக்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் அக்னிசித்தர், கலப்பை மக்கள் இயக்க கொள்கைபரப்பு செயலாளர் நாகராஜன், குருசாமிசெல்வதிருமணி, கோவில் நிர்வாகிகள்அய்யப்பன், முத்தமிழ்செல்வன் மற்றும் இருமுடி கட்டிய ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்