எல்லை வரையறை நிறைவு: தை பிறந்தவுடன் மயிலாடுதுறை மாவட்டம் செயல்படும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தகவல்
எல்லை வரையறை நிறைவடைந்து விட்டது என்றும், தை பிறந்தவுடன் மயிலாடுதுறை மாவட்டம் செயல்படும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை அருகே உள்ள ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் மருத்துவ மையம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரி லலிதா தலைமை தாங்கினார்.
கூடுதல் கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் சண்முகசுந்தரம் வரவேற்று பேசினார்.
விழாவில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மினி கிளினிக்கை திறந்து வைத்தார். விழாவை தொடர்ந்து அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
எல்லை வரையறை
அப்போது அவர் கூறுகையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லை வரையறை நிறைவடைந்து விட்டது. தை மாதம் பிறந்தவுடன் மயிலாடுதுறை மாவட்டம் நிச்சயமாக செயல்படும்’ என்றார்.
விழாவில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், மாயூரம் கூட்டுறவு நகர வங்கி தலைவருமான வி.ஜி.கே.செந்தில்நாதன், உதவி கலெக்டர் மகாராணி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் மகேஸ்வரி முருகவேல், முன்னாள் எம்.எல்.ஏ. தங்கமணி, அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் லியாகத் அலிகான் நன்றி கூறினார்.