விபத்தில் உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம்: அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்
கரூர் அருகே விபத்தில் உயிரிழந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் ஏற்பட்ட தாமதத்தை கண்டித்து அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர்,
கரூர் அருகே உள்ள புலியூர் காளிபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 20). இவர் கரூரில் உள்ள பஸ் கூண்டு கட்டும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் கரூர்-திருச்சி சாலையில் மோட்டார் சைக்கிளில் சதீஷ்குமார் சென்று கொண்டு இருந்தார். வீரராக்கியம் பிரிவு சாலை அருகே அவர் சென்றபோது திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், படுகாயம் அடைந்த சதீஷ்குமார், சிகிச்சைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.
உறவினர்கள் மறியல்
இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மதியம் வரை சதீஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் சதீஸ்குமாரை எதிரியாக காட்டி உள்ளதாகவும் தெரிகிறது.
இதனை கண்டித்து சதீஷ்குமாரின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் ஒன்று திரண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு கரூர்-திருச்சி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் தாந்தோணிமலை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், கரூர்-திருச்சி சாலையில்ஒருமணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.