மேலைச்சிவபுரியில் வீட்டில் நகை-வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது

மேலைச்சிவபுரியில் வீட்டில் நகை-வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து வழக்கில் 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2020-12-21 23:27 GMT
பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரியை சேர்ந்தவர்கள் லட்சுமணன் மற்றும் ரமணப்பிரியன. இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் திருச்சி மற்றும் சென்னையில் வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டை பராமரிக்க மேலைச்சிவபுரியை சேர்ந்த சரஸ்வதி என்பவர் பராமரித்து வந்தார்.

இதில் சரஸ்வதி கடந்த 18-ந் தேதி வீட்டில் வேலையை முடித்து விட்டு, வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 1½ பவன் தங்கம்,2 கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ஒரு இன்வெர்ட்டர், ஒரு பேட்டரி உள்ளிட்ட சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளர். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

3 பேர் கைது

இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டை கைரேகை நிபுணர்கள் வரவழைத்து தடையம் சேகரிக்கப்பட்டது. மேலும் சேகரிக்கப்பட்ட தடயம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பிரம்புவயல் வீரப்பன் மகன் பழனியப்பன் (வயது 39) என்பவரது கைரேகை பொருந்தியது. மேலும் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் தேவகோட்டை நித்ரவயல் தேர்போகியை சேர்ந்த சின்னத்துரை மகன் அரவிந்த் (26), ஜெயராஜ் மகன் மணிவண்ணன் (28) ஆகியோருடன் சேர்ந்து லட்சுமணன் வீட்டின் கொள்ளையடித்தை ஒப்பு கொண்டார்.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து பேட்டரி, இன்வெர்ட்டர், 2 கிலோ வெள்ளி பொருட்கள், தங்க நகைகள் அனைத்தும் மீட்டு வீட்டின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். கொள்ளையர்களை துரிதமாக பிடித்த பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக் கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு உள்ளிட்ட தனிப்படை போலீசாரை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார். கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்