சட்டமன்ற தேர்தலையொட்டி புதிதாக 560 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்துள்ளன கலெக்டர் தகவல்
சட்டமன்ற தேர்தலையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு புதிதாக 560 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்துள்ளன என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்துக்கு கூடுதலாக 560 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேரில் பார்வை யிட்டார்.
பலத்த பாதுகாப்பு
பின்னர் எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு 683 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன. ஒரு மையத்துக்கு 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப் படுகிறது.
சரிபார்க்கும் பணிகள்
நீலகிரியில் ஏற்கனவே 684 பேலட் யூனிட், 683 கண்ட்ரோல் யூனிட், 684 விவிபேட் எந்திரங்கள் இருக்கிறது. தற்போது மராட்டிய மாநிலத்தில் இருந்து புதிதாக 830 பேலட் யூனிட், 470 கண்ட்ரோல் யூனிட், வி.வி.பேட் 560 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்து உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளது. பெல் நிறுவனம் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் விரைவில் நடைபெறும். தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுடன் காணொலி காட்சி மூலம் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா, ஊட்டி தாசில்தார் குப்புராஜ், தேர்தல் தனி தாசில்தார் மகேந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.