வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்து போட்டி அ.பு.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பேட்டி
வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று அ.பு.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செந்தில் குமார் கூறினார்.
அனுப்பர்பாளையம்,
அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூர் தோட்டத்துப்பாளையத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கட்சியின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான வி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் வேலுசாமி வரவேற்றார். எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் ரெங்கசாமி, மாநில இளைஞரணி தலைவர் தெய்வீகன், மாநில தலைமை நிலைய செயலாளர் அப்புக்குட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கட்சி நிர்வாகிகள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சமையல் கியாஸ் விலை
ஏழை, எளிய மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு உடனே குறைக்க வேண்டும். வேளாண் மசோதா சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் முல்லைராஜன், ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் மக்கள் நல அணி செயலாளர் சில்வர் சின்னசாமி உள்பட மாவட்ட இளைஞரணி, எம்.ஜி.ஆர்.மன்ற, மகளிரணி, மாணவரணி, வர்த்தக அணி, விவசாய அணி, தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தனித்து போட்டி
முன்னதாக பொதுச்செயலாளர் வி.செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிடமுன்னேற்றக் கழகம் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளோம். ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது தேர்தலில் மக்களின் வாக்கை பெறுவதற்கு மட்டுமே. நடிகர் ரஜினிகாந்த் இன்னும் கட்சி முழுமையாக தொடங்கப்படாத நிலையில் அவருடைய அரசியல் பிரவேசம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.