வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

Update: 2020-12-21 03:40 GMT
வேலூர்,

வேலூர் மாவட்ட பா.ஜ.க. ஊரக வளர்ச்சி மற்றும் நகர்புற பிரிவு செயற்குழு் கூட்டம் வேலூர் வேலப்பாடியில் நேற்று நடைபெற்றது. ஊரக பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் முருகன், மாவட்ட செயலாளர்கள் சந்தோஷ்குமார், நித்ய குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் வெங்கடேசன், வேலூர் மாவட்ட தலைவர் தசரதன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில், வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதனை விரைந்து முடிக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை தூர்வார வேண்டும். குடியாத்தத்தில் இருந்து பரதராமி செல்லும் நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும். குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட பாக்கம் ஏரிக்கு மோர்தானா அணையிலிருந்து தண்ணீர் விடுவதற்கு நீர்வரத்து கால்வாய்களை சரி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பா.ஜ.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்