மராட்டிய மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பத்தூருக்கு கொண்டு வரப்பட்டன

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

Update: 2020-12-21 03:30 GMT
திருப்பத்தூர்,

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மராட்டிய மாநிலம் பீட் மற்றும் சோலாப்பூர் மாவட்டங்களில் இருந்து எதிர்வரும் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 4 லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது.

இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க குடோனில் மாவட்ட கலெக்டர் சிவன் அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், சப்ி-கலெக்டர் வந்தனாகார்க் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்