மதுரையில் புதிதாக 20 பேருக்கு கொரோனா
மதுரையில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் உயிரிழந்தார்.
மதுரை,
மதுரையில் நேற்று புதிதாக 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 14 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 274 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மதுரையில் நேற்று 28 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 23 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள்.
இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 521 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 305 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இதுபோல், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 448 ஆக உள்ளது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் மதுரை மருத்துவ கல்லூரி மாணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி, விடுதியில் தங்கி உள்ள மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் முடிவு செய்து, அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தற்போது வரை பரிசோதனை செய்யப்பட்டதில், 60 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.