விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

ஓசூரில் விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-12-20 14:00 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 39). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர் வீட்டின் முன்பு தனது காரை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாக்கெட்டில் தீயை கொளுத்தி நரசிம்மனின் கார் மீது வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயை உடனடியாக அணைத்தனர். இது குறித்து நரசிம்மன் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதேபோல தடயவியல் நிபுணர்களும் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து நரசிம்மன் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்