இட்டமொழி அருகே சிறுத்தைப்புலி குட்டியுடன் மீண்டும் நடமாட்டம்; வனத்துறையினர் தேடுதல் வேட்டை

இட்டமொழி அருகே உள்ள திருவடனேரியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகள் விஜயஅச்சம்பாட்டை சேர்ந்த சுடலை (வயது 57) மற்றும் வெள்ளூர் சி.முருகன் (54) ஆகியோர் நேற்று காலையில் அங்குள்ள வயல் அருகே உள்ள புதர் பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று குட்டியுடன் பதுங்கி நடந்து செல்வதை பார்த்துள்ளனர்.

Update: 2020-12-20 02:59 GMT
வனத்துறையினர் தேடுதல் வேட்டை
பின்னர் அவர்கள் இதுகுறித்து ஊர் மக்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனே ஊர் மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தைப்புலியை தேடினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும் விரைந்து வந்து திருவடனேரி பகுதியில் புதர்கள், வயல்காடு பகுதிகளில் சிறுத்தைப்புலியை தேடினார்கள். அங்கு பதிந்திருந்த பெரிய கால் தடங்களையும் ஆய்வுசெய்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த சிலதினங்களுக்கு முன்னர் சங்கனாங்குளம், வடக்கு விஜயநாராயணம் பகுதிகளில் குட்டியுடன் சிறுத்தைபுலியின் நடமாட்டத்தை விவசாயிகள் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்