கோட்டூர் - திருவாரூர் சாலையில் ‘திடீர்’ பள்ளம் போக்குவரத்து பாதிப்பு

கோட்டூர்- திருவாரூர் சாலையில் ‘திடீர்’ பள்ளம் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-12-20 02:06 GMT
கோட்டூர், 

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ளது குலமாணிக்கம் கிராமம். இங்கு கோட்டூர் - திருவாரூர் சாலையில் உள்ள பெரிய குருவாடி கிராமத்தின் வடிகால் குழாய் நேற்று முன்தினம் உடைந்தது. இதனால் அங்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த பள்ளத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சீரமைக்க கோரிக்கை

கோட்டூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட தலைநகரான திருவாரூருக்கும், வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய பகுதிகளுக்கும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இந்த ‘திடீர்’ பள்ளத்தை உடனடியாக சீரமைத்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்