தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீசார் குடியிருப்பு பகுதியில் ஆம்புலன்ஸ் சேவை; சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி ஆயுதப்படை போலீசார் குடியிருப்பு பகுதியில் ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

Update: 2020-12-20 02:04 GMT
தூத்துக்குடி ஆயுதப்படைஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்த போது
ஆம்புலன்ஸ்
தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்புகளில் போலீசார் குடும்பத்தினர் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் வெகு தொலைவில் இருந்து ஆம்புலன்ஸ் வரவேண்டி உள்ளது. இதனால் ஏற்படும் காலதாமதத்தால் பாதிக்கப்பட்டு வந்த காவலர் குடும்பத்தினர், இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையின் அடிப்படையில், முதலுதவி சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் அடங்கிய புதிய ஆம்புலன்ஸ் சேவை ஆயுதப்படை குடியிருப்பில் 24 மணி நேரமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ் சேவையை காவலர் குடியிருப்பினர் மட்டுமல்லாது அப்பகுதி பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ளவும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

சேவை தொடக்கம்
இந்த புதிய ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, குடியிருப்பு வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் அவர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் கழிவு நீரை சுத்திகரித்து அந்த நீரை மரம், செடி, கொடிகளுக்கு ஊற்றிடவும், வீட்டு உபயோக்கத்திற்கு பயன்படுத்துவதற்கும் தகுந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் குடியிருப்பில் உள்ள வீடுகளை சிறந்த முறையில் பராமரித்து வரும் முதல் நிலைக்காவலர் ரமேஷ் குமார், காவலர் மயிலேரி, தலைமை ்காவலர் தஸ்நேவில் ஆகியோருக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணபிரான், இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன், ஆம்புலனஸ் மேலாளர் ரஞ்சித்குமார், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி பொறியாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்