கிராம நிர்வாக அலுவலகம் அருகே திறந்து கிடக்கும் கழிவுநீர் தொட்டியால் விபத்து ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடு்க்க கோரிக்கை
கிராம நிர்வாக அலுவலகம் அருகே திறந்து கிடக்கும் கழிவுநீர் தொட்டியால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நடவடிக்கை எடு்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
நொய்யல்,
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முனிநாதபுரத்தில் வேட்டமங்கலம் (கிழக்கு) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டப்பட்டு நிர்வாக பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அருகே கழிவுநீர் தொட்டி (செப்டிக் டேங்க)் கட்டப்பட்டுள்ளது.
இந்த கழிவுநீர் தொட்டி பல ஆண்டுகளாக மூடப்படாமல் திறந்தே கிடக்கிறது. கிராமநிர்வாக அலுவலகத்திற்கு பொதுமக்கள், விவசாயிகள், மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வந்து செல்கின்றனர். அவர்கள் தடுமாறி தொட்டியில் விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ேகாரிக்கை
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இருப்பினும் அந்த கழிவுநீர் தொட்டி திறந்த நிலையிலேயே உள்ளது. எனவே உள்ளாட்சி துறை உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேட்டமங்கலம் (கிழக்கு) ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.