தூக்குப்போட்டு பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை

திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-12-19 17:05 GMT
திருப்பூர்,

திருப்பூர் செரீப் காலனியை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணமூர்த்தி (வயது 39). இவர் சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். கிரு‌‌ஷ்ணமூர்த்திக்கு பிறந்தது முதல் கால் சிறிது முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் மனவேதனையுடன் தனது மனைவியிடமும் பலமுறை கூறி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஒரு அறையில் கிரு‌‌ஷ்ணமூர்த்தி படுக்கச்சென்றார்.

நள்ளிரவு 1.30 மணியளவில் சத்தம் கேட்டு அவரது மனைவி பிரபாவதி சென்ற போது அருகே உள்ள அறையில் கிரு‌‌ஷ்ணமூர்த்தி தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக அவர் சத்தம் போட அவருடைய வீட்டில் உள்ளவர்கள் கிரு‌‌ஷ்ணமூர்த்தியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர்.

டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தெற்கு போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கால் சிறிது பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பதால் மிகவும் மனவருத்தம் அடைந்து இருந்து வந்தார்.இதனால் அவர் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அவருடைய மனைவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரு‌‌ஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்